Sunday 19 June 2011

Chicken Biryani


தேவையானவை:

கோழிக்கறி  - 1 /2  கிலோ
பாஸ்மதி ரைஸ்  - 2  கப்

தாளிக்க:

எண்ணை - 100ml
நெய்  - 2 tsp
வெங்காயம் - 1 கப் (பெரிது பெரிதாக நறுக்கவும்)
தக்காளி - 3 /4  கப் (பெரிது பெரிதாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (சுவைக்கேற்ப , நறுக்காமல் அப்படியே போடவும்)
புதினா - கையளவு
பட்டை - 4 
கிராம்பு - 3 
பிரியாணி இலை - 2 
அன்னாசி பூ -1 
கேசரி கலர் - 1 சிட்டிகை (optional)
அஜினோமோடோ - 1  சிட்டிகை(optional)
எலுமிச்சை - பாதி


அரைக்க:
இஞ்சி  - விரல் நீளம் 3 
பூண்டு  - 15 பல்
புதினா  - கையளவு 
கொத்தமல்லி தலை - கையளவு
பச்சை மிளகாய்  - 1 (சுவைக்கேற்ப)

அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை:

பாஸ்மதி ரைஸ்:

  அரிசியை  10 முதல் 15 நிமிடம் ஊறவைத்து, பின்பு தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி 2 நிமிடங்களுக்கு இந்த வடித்த அரிசியை வறுக்கவும். இதை தனியே வைக்கவும்.

தாளிக்கும் முறை:

  குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் எண்ணை,நெய் ஊற்றவும். சூடான பின்பு பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,அன்னாசி பூ போட்டு தாளிக்கவும்.பின்பு பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன் தக்காளியை போடவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலா மற்றும் புதினா இலைகளை போட்டு நன்கு வதக்கவும்.எண்ணை பிரியும் வரை வதக்கவும்.பின்னர் சுத்தபடுத்தி வைத்துள்ள கோழி கறியை போட்டு 15 நிமிடம் வரை வதக்கவும். அல்லது எண்ணை நன்கு பிரிந்து வரும் வரை வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் தண்ணீர் ஊற்றவும். 1 கப் பாஸ்மதி ரைஸ்கு 1 1 /2  கப் தண்ணீர் ஊற்றவும். அதில் கேசரி பவுடர், அஜினோமோட்டோ போடவும்.தண்ணீர் நன்கு கொதித்த பின் அரிசியை போடவும்.பின்னர் பாதி எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும். கீழிருந்து மேலாக ஒரு முறை கலக்கி விடவும். அரிசி பாதி வெந்தபின் குக்கர் மூடவும்.மிதமான சூட்டில் வைத்து 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். 2 நிமிடம் களித்து விசிலை தூக்கி விட்டு குக்கர் ஐ திறக்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடியிருந்து மேலாக ஒரு முறை கலக்கி விடவும். சுவையான சூடான சிக்கன் பிரியாணி தயார். சூடாக பரிமாறவும்.

இதற்கு வெங்காய பச்சடியை சைடு டிஷாக பரிமாறலாம்.


டிப்ஸ்:

1 . பாஸ்மதி ரைஸ் வறுபதால் தண்ணீர் அளவு மாறாமல் இருக்கும்.இல்லாவிடில் இந்த அரிசியில் உள்ள தண்ணீரால் சாதம் குலைந்து விடும்.
2 . கேசரி பவுடர் கட்டாயமல்ல. கலராக இருக்க வேண்டுமானால் மட்டும் சேர்க்கலாம்.
3 . சிக்கனை எண்ணை பிரியும் வரை வதக்கினால் சுவை இன்னும் அதிகரிக்கும்.சிக்கனும் நன்கு வெந்து இருக்கும்.
4 . எலுமிச்சம் பழச்சாறு சேர்ப்பதால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

இதில் சிக்கனுக்கு பதிலாக மட்டன், காளான், காய்கறி உபயோகித்தும் செய்யலாம்.





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.