Friday 1 July 2011

நானா விளையாண்டேன்???

முன்ன எல்லாம் ஸ்கூல் போனா சமத்தா எந்த சேட்டையும் செய்யாம வருவா. இப்போ ஊர் வம்ப எல்லாம் வெலைக்கு வாங்கிட்டு வந்திடும் போல.
இன்னைக்கு காலைல ஒரு பாசி போட்டுகிட்டு ஸ்கூல் போனா. சாயங்காலம் வீட்டுக்கு வந்த பின்னாடி நடந்த சீன் இது.

நிக்கி: அம்மா நான் இன்னைக்கு ஸ்கூல் ல இப்பிடி தான் பாசிய சுத்திட்டே இருந்தேன்னு சுத்தி காட்டினா.
நான்: ஏண்டி உங்க மிஸ் திட்ட மாட்டாங்களா?

நிக்கி: நானாம்மா விளையாடறேன், பாசி தான விளையாடுது?

வாயடைச்சு போனேன்!!!



Friday 24 June 2011

முடியலப்பா முடியல.....

ஸ்ஸ்ஸ்ஸ்...  அப்பா ஒரு வழியா காலைல எந்திரிச்சு சமையல் வேலையெல்லாம் முடுசாச்சுன்னு நெனைக்கும் போதே அத விட பெரிய வேலை ஒன்னு இருக்கறது நெனவுக்கு வரும். வேற என்ன எல்லாம் நிக்கிய எழுப்பரதுதான்.

ஆச்சு ஒரு வழியா 7  ல இருந்து எழுப்ப ஆரம்பிச்சு 7 .4 0 கு எழுந்தாச்சு.அத எழுப்பறதுக்குள எத்தன முறை செல்லம், குட்டிம்மா நு கொஞ்ச வேண்டியிருக்கு. அடுத்த பல் வெலக்கியாச்சு. ஏற்கனவே லேட் ஆயிடுச்சு.அதனால நான் சொன்னேன்.

"டிரெஸ்ஸ கழட்டிட்டு நேர பாத்ரூமுக்கு போ. டைம் ஆகிடுச்சு பாரு."

எங்க வீட்டுல பெட்ரூம்ல இருக்கற பாத்ரூம்ல தான் அந்த மேடம் குளிப்பாங்க. சொல்லிமுடிச்ச அடுத்த நிமிஷம் வந்த பதில் கேள்வி..


"எப்பிடிம்மா நேரா பாத்ரூமுக்கு போக முடியும்.பெட்ரூம் போயி தான் போனும்..." ஒரு  நக்கலான பார்வை......

எல்லாம் என் நேரம். இப்பிடி எடக்கு மடக்கா யோசிக்கற ஒருத்தர(எல்லாம் என் ஆத்துகாரர் தான்) வச்சுட்டே 4 வருசமா குப்பைய கொட்ட முடியல... இப்போ நீயுமா????????  உர்ர்ரர்ர்ர்.....

கோழைன்னு தான் சொல்லணும்...

புதன் அன்னைக்கு பேப்பர்ல ஒரு நியூஸ் படிச்சேன். ஒரு பனிரெண்டாவது படிக்கற பையன் தூக்கு போட்டு செத்துட்டான்னு. என்னடா விசயம்னு பாத்தா பாராட்டறதா இல்ல திட்டரதானே தெரியல.

கணக்கு பாடத்துல சந்தேகம் கேட்டதுக்கு வாத்தியாரு திட்டினாராம். அந்த வாத்தியாரு மேல நடவடிக்கை எடுக்க பசங்க கிட்ட இருந்து கையெழுத்து வாங்கி இருக்கான். இத கேட்ட மத்த மூணு வாத்தியாருங்களும் திட்டி இருக்காங்க. இதனால மனசு நொந்து போயி தூக்கு போட்டு கிட்டான். 7  பக்கத்துல ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு போய்ட்டான்.

இந்த government  ஸ்கூல் வாத்தியாருங்க எல்லாம் பொறுப்பு இல்லாம இப்பிடி சரியாய் பாடம் நடத்தாம இருக்காங்க. என்னோட சாவுக்கு அப்பறமாவது இது மாதிரி பொறுப்பு இல்லாம இருக்கற டீசெர்ஸ் திருந்தணும்னு எழுதி இருக்கான்.

அவனோட நோக்கம் நல்லா தான் இருக்கு.ஆனா அதுக்கு உயிரை விடணும்னு அவசியம் இல்லையே. அவன் செஞ்சது கோழை தனமா இல்ல இருக்கு. எல்லா பிரச்சனைக்கும் உயிரை விடறதுதான் தீர்வுன்னா அப்ப யாருமே உயிர் வாழ முடியாதே. இந்த காலத்துல இருக்கற ஸ்கூல் , காலேஜ் படிக்கற பிள்ளைங்க எல்லாம் எதுகெடுத்தாலும் உயிரை விட முடிவு பண்ணிடறாங்க. இந்த எண்ணம் மாறனும். சின்ன புள்ளைல இருந்தே தைரியத்த சொல்லிகொடுக்கனும். எதையும் எதிர்த்து போராடற மன பக்குவத்த வளக்கணும். சாவு முடிவு இல்லன்னு சொல்லி கொடுக்கணும்.


Wednesday 22 June 2011

பையனா? பொண்ணா?

நிக்கிக்கு பொண்ணுங்க ட்ரெஸ்ஸ விட பையனுக டிரஸ் தான் ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் போக ஆரம்பிச்ச 3வது நாள் டிரஸ் மாத்தும் போது நடந்த பேச்சுவார்த்தை இது.

நிக்கி: அம்மா எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு trouser போட்டுட்டு வர்ராமா. நாளைக்கு எனக்கும் trouser போட்டு விடறியா?

நான்: அது எப்பிடிடி மிஸ் விடுவாங்க girls pinoform தான் போட்டுக்கணும். பாய்ஸ் தான் அப்பிடி trouser  போடணும். நீ சரியாய் பாத்து இருக்கமாட்ட. நாளைக்கு போய் பாரு. 

நிக்கி: (ஏதோ யோசனை வந்தவளா) அம்மா அந்த பொண்ணு கம்மல் எல்லாம் போட்டு இருக்காம்மா. ஆன்னா ஒரு காதுல மட்டும் தான் போட்டு இருக்கம்மா.

(இப்போ தான் எனக்கு வெளங்கிச்சு.அவன் பையன் தான் ஸ்டைலா கம்மல் போட்டு இருக்கான்னு..)

நான்: குட்டிம்மா அது பையன் தாண்டா. அவன் ஸ்டைலுக்கு கம்மல் போட்டு இருக்கான்.பாய்ஸ் எல்லாம் இப்போ ஸ்டைலுக்கு ஒரே ஒரு காதுல மட்டும் கம்மல் போட்டு இருக்காங்கடா. ஆனா அவன் பையன் தான். அதான் trouser  போட்டு இருக்கான்.

நிக்கி: ஆமாம்மா crechela கூட அருண் அண்ணா ஒரே ஒரு கம்மல் போட்டு இருப்பாங்களே அது மாதிரியா........

ஒரு வழியா பாய்ஸ் & girls வித்தியாசத்த புரிய வச்சாச்சுன்ற நிம்மதி எனக்கு.

முன்ன எல்லாம் பொண்ணுங்கன்னா பாவாடை சட்டை, நீளமான முடி, வளையல் எல்லாம் போட்டு இருப்பாங்க. பசங்கனா திரௌசெர் சட்டை போடுவாங்கனு easya  விளக்கிடலாம். ஆனா இப்போ அதா கூட ரொம்ப பிளான் பண்ணி யோசிச்சு கொழந்தைகளுக்கு புரிய வைக்கணும் போல.

என்ன பண்ணறது வேற வழியே இல்ல. parents  நெறைய யோசிக்க வேண்டியது தான்.

Tuesday 21 June 2011

கேள்வியும் பதிலும்...


வர வர நிகிதாவின் கேள்விகளும் கற்பனைகளும் அதிகமாகிட்டே இருக்கு. இது எங்க போயி முடியுமோ....

நேத்து நிகிதவுக்கு குளிக்க வச்சுட்டு இருந்தேன்.அப்போ அவ கேக்கரா எப்போ அம்மா நீ சின்ன பாப்பாவா ஆவ நான் உன்ன குளிப்பட்டி ரெடி பண்ணிட்டு ஆபீஸ் போவேன்?? எப்போ நீ ஸ்கூல் போவ நான் உன்ன விட்டுட்டு ஆபீஸ் போவேன்?

சின்ன பசங்க தான் பெரியவங்களா ஆவங்களே தவிர பெரியவங்க சின்ன பசங்கள மாற மாட்டாங்க அப்படினு சொன்னேன். 

ஓஓஓ அபிடியானு யோசிக்க ஆரம்பிச்சுட்டா..... நாளைக்கு என்ன கேள்வி கேப்பாளோ???

Chicken kulambu

தேவையானவை:

சிக்கன் - 1 /2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது(பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 /4  ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 /2  ஸ்பூன் (சுவைக்கேற்ப)
கொத்தமல்லி தூள் - 4  ஸ்பூன் 
உப்பு - சுவைக்கேற்ப

அரைக்க:

தேங்காய் - 1 /2 மூடி
பட்டை - 2
கிராம்பு - 2 
சோம்பு - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
மிளகு - 1 /2  ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 (optional )
 
அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்கு நைசாக அரைக்கவும்.

தாளிக்க:

கடுகு - 1  ஸ்பூன்
வுளுந்து - 1 /2  ஸ்பூன்
சோம்பு - 1 /4  ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

சிக்கனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் 3  ஸ்பூன் எண்ணெய் வூற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கிய பின் சிக்கனை சேர்த்து வதக்கவும்.சிக்கனில் இருந்தே தண்ணீர் வரும் எனவே தண்ணீர் வூற்ற வேண்டாம். சிக்கனில் இருந்து தண்ணீர் வெளியேறிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கிளறவும்.5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை வூற்றவும். இந்த கலவையை குக்கருக்கு மாற்றி நன்கு வேக விடவும்.



பொதுவாக 5 முதல் 6  விசில் தேவைபடலாம். பின்னர் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விசில் போனவுடன் தாளிக்க தேவையான வற்றை தாளித்து வூற்றவும்.

கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தளை தூவவும்.





இட்லி,தோசை, சாதத்திற்கு ஏற்ற குழம்பு இது.

Sunday 19 June 2011

Chicken Biryani


தேவையானவை:

கோழிக்கறி  - 1 /2  கிலோ
பாஸ்மதி ரைஸ்  - 2  கப்

தாளிக்க:

எண்ணை - 100ml
நெய்  - 2 tsp
வெங்காயம் - 1 கப் (பெரிது பெரிதாக நறுக்கவும்)
தக்காளி - 3 /4  கப் (பெரிது பெரிதாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (சுவைக்கேற்ப , நறுக்காமல் அப்படியே போடவும்)
புதினா - கையளவு
பட்டை - 4 
கிராம்பு - 3 
பிரியாணி இலை - 2 
அன்னாசி பூ -1 
கேசரி கலர் - 1 சிட்டிகை (optional)
அஜினோமோடோ - 1  சிட்டிகை(optional)
எலுமிச்சை - பாதி


அரைக்க:
இஞ்சி  - விரல் நீளம் 3 
பூண்டு  - 15 பல்
புதினா  - கையளவு 
கொத்தமல்லி தலை - கையளவு
பச்சை மிளகாய்  - 1 (சுவைக்கேற்ப)

அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை:

பாஸ்மதி ரைஸ்:

  அரிசியை  10 முதல் 15 நிமிடம் ஊறவைத்து, பின்பு தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி 2 நிமிடங்களுக்கு இந்த வடித்த அரிசியை வறுக்கவும். இதை தனியே வைக்கவும்.

தாளிக்கும் முறை:

  குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் எண்ணை,நெய் ஊற்றவும். சூடான பின்பு பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,அன்னாசி பூ போட்டு தாளிக்கவும்.பின்பு பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன் தக்காளியை போடவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலா மற்றும் புதினா இலைகளை போட்டு நன்கு வதக்கவும்.எண்ணை பிரியும் வரை வதக்கவும்.பின்னர் சுத்தபடுத்தி வைத்துள்ள கோழி கறியை போட்டு 15 நிமிடம் வரை வதக்கவும். அல்லது எண்ணை நன்கு பிரிந்து வரும் வரை வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் தண்ணீர் ஊற்றவும். 1 கப் பாஸ்மதி ரைஸ்கு 1 1 /2  கப் தண்ணீர் ஊற்றவும். அதில் கேசரி பவுடர், அஜினோமோட்டோ போடவும்.தண்ணீர் நன்கு கொதித்த பின் அரிசியை போடவும்.பின்னர் பாதி எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும். கீழிருந்து மேலாக ஒரு முறை கலக்கி விடவும். அரிசி பாதி வெந்தபின் குக்கர் மூடவும்.மிதமான சூட்டில் வைத்து 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். 2 நிமிடம் களித்து விசிலை தூக்கி விட்டு குக்கர் ஐ திறக்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடியிருந்து மேலாக ஒரு முறை கலக்கி விடவும். சுவையான சூடான சிக்கன் பிரியாணி தயார். சூடாக பரிமாறவும்.

இதற்கு வெங்காய பச்சடியை சைடு டிஷாக பரிமாறலாம்.


டிப்ஸ்:

1 . பாஸ்மதி ரைஸ் வறுபதால் தண்ணீர் அளவு மாறாமல் இருக்கும்.இல்லாவிடில் இந்த அரிசியில் உள்ள தண்ணீரால் சாதம் குலைந்து விடும்.
2 . கேசரி பவுடர் கட்டாயமல்ல. கலராக இருக்க வேண்டுமானால் மட்டும் சேர்க்கலாம்.
3 . சிக்கனை எண்ணை பிரியும் வரை வதக்கினால் சுவை இன்னும் அதிகரிக்கும்.சிக்கனும் நன்கு வெந்து இருக்கும்.
4 . எலுமிச்சம் பழச்சாறு சேர்ப்பதால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

இதில் சிக்கனுக்கு பதிலாக மட்டன், காளான், காய்கறி உபயோகித்தும் செய்யலாம்.